பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை கொலை செய்த முகமது ஹாஷிம் ஜாமீனில் வந்து பங்கேற்பு - இது தான் சட்ட ஒழுங்கா ?
பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை கொலை செய்த முகமது ஹாஷிம் ஜாமீனில் வந்து பங்கேற்பு - இது தான் சட்ட ஒழுங்கா ?
முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், CPI(M) கட்சியின் இளைஞர் அணி, DYFIயின் தலைவர் முகமது ரியாசுக்கும் நேற்று திங்கள்கிழமை காலை திருவனந்தபுரத்தில் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரு தரப்புக்கும் குழந்தைகள் உள்ள நிலையில் பழைய மண வாழ்வை முறித்துவிட்டு இந்த காதல் திருமணத்தை செய்து கொண்டனர்.
கொரோனாக் கட்டுப்பாடுகளை அடுத்து 50 பேர்கள் மட்டுமே இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். CPI (M), DYFIயின் மூத்த தலைவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், தொழில்துறை அமைச்சர் இ பி ஜெயராஜன் , நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்பட்டது.
இந்த நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒட்டபிலாவ் சுரேஷ் பாபுவைக் கொலை செய்ததற்காக தற்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முகமது ஹாஷிம். இவர் மணமகன் முகமது ரியாசுக்கு மிகவும் வேண்டப்பட்டவராம்.
தனது திருமணத்துக்கு முகமது ஹாஷிமை வரவைக்க வேண்டும் என்பதற்காக உள்துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற மாமனார் முதல்வர் பினராயியை வற்புறுத்தி சிறையில் இருந்து அவசர ஜாமீனில் இந்த கொலையாளியை வரவழைத்துள்ளது கேரளாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் முகமத் ரியாஸ் பசு வதையை தடுக்கும் சட்டத்தை எதிர்த்து ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக மாட்டுக் கறிகளை விதம் விதமாக சமைத்து பீப் திருவிழாக்கள் நடத்தியவர். சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
இந்த நிலையில், இவர் ஹிந்து குடும்ப மாப்பிள்ளைப்போல உடை அணிந்து மாலை மாற்றி மணம் செய்து கொண்டது பலரின் புருவத்தை நெரித்தது. இப்போது தேசத்துக்காக தொண்டு செய்து வந்த ஆர்.எஸ்.எஸ். சேவகரை கொலை செய்தவரை தனது திருமணத்தின் முக்கிய விருந்தினராக சிறையில் இருந்து வரவழைத்தது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பினராயி ஆட்சியில் கொலையாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து மக்கள் கேளிக்கையாக பேசத்தொடங்கி விட்டனர்.
சமீபத்தில் தனது சக கட்சி நிர்வாகியையே கொலை செய்து விட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்திருந்த கண்ணூர் மாவட்ட கட்சிக்காரரான குஞ்சனாதனை மாணிக்கத் தொண்டர் என்றும், சுயநலம் இல்லாத தொண்டர் என்றும் பினராயி விமர்சித்தது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது.