உத்ராக்காண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் அடுத்த பத்து நாட்களில் கொரோனா பரிசோதனை - பா.ஜ.க அரசு அதிரடி!
உத்ராக்காண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் அடுத்த பத்து நாட்களில் கொரோனா பரிசோதனை - பா.ஜ.க அரசு அதிரடி!

கொரானா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த 10 நாட்களுக்குள் மாநில மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று இருக்கிறதா என சோதித்துப் பார்க்க (Screening, Testing) உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை பொது மக்களுக்கு தெரிவித்த முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் கூறுகையில், "மாநிலத்தின் அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் (DM) மாநில மக்கள்தொகையை பத்து நாட்களுக்குள் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதனால் சரியான நிலைமையை தீர்மானிக்க முடியும்.
இந்த பெரிய திட்டத்தை நிறைவேற்ற, ஆஷா தொழிலாளர்கள் மற்றும் அங்கன்வாடிகள் உதவியை மாநில நிர்வாகம் மேற்கொள்ளும்.
உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 1,816-ஐ தொட்டுள்ள நேரத்தில் மாநில அரசின் இந்த முடிவு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) 31 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.