Kathir News
Begin typing your search above and press return to search.

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக மாற்றும் - பிரதமர் மோடி பெருமிதம்.!

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக மாற்றும் - பிரதமர் மோடி பெருமிதம்.!

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக மாற்றும் - பிரதமர் மோடி பெருமிதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Jun 2020 9:50 AM GMT

கொரோனா பாதிப்பை வாய்ப்பாக பயன்படுத்தி நமது நாடு இறக்குமதியை குறைத்து தற்சாப்பு பொருளாதார நாடாக உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது சுய சார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வர வேண்டும்.

இந்தியா கொரோனா நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளது. நமது நாடு எதிர்காலத்தில் இறக்குமதியைக் குறைத்து தற்சார்பு பொருளாதார நாடாக உருவெடுக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நாம் வளம் பெற வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பெருமிதத்தோடு கூறினார் பிரதமர் மோடிஜி.

இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News