மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் - இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்.!
மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் - இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்.!

இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்காக தற்போது ஸ்ரீசாந்த் கேரளா ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் முறைகேடு நடத்தியதாக ஸ்ரீசாந்த் மீது புகார் எழுந்தது. அதன் பின்னர் அதனை விசாரித்த பிசிசிஐ ஸ்ரீசாந்த் மற்றும் அவருடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட முழுதடை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல் முறையிட்டார். பிசிசிஐ குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம் ஸ்ரீசாந்துக்கு தண்டனை காலம் பற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதன்பின்னர் பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதை பற்றிய விசாரணை நடத்தினார். அதில் ஆயுள் தண்டனைக்கு பதிலாக ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தார். அது 13.9.2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அந்த காலம் உள்ளது. தற்போது இன்னும் சில மாதங்களில் அந்த தண்டனை முடிய உள்ளது. இதன் பின்னர் மீண்டும் அவருடைய து கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம். இவ்வாறு நீதிபதி ஜெயின் உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடை செப்டம்பர் மாதம் முடிய உள்ள நிலையில் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனைப்பற்றி கேரளா அணியின் புதிய பயிற்சியாளர் டினு யோஹண்ணன் கூறியது: ஸ்ரீசாந்த்தை கேரளா அணியில் சேர்த்துக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால், அவர் அவருடைய உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு சமயத்தில் பயிற்சி மைதானத்துக்கு சென்று எடுக்க முடியாது. ஸ்ரீசாந்த் மீண்டும் கேரளா அணிக்காக விளையாடுவதை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். அவரை வரவேற்கிறோம். பல வருடத்துக்கு முன்பே இவர் யார் என்று உலகுக்கு தெரியும் என்றார்.
கேரள அணியில் மீண்டும் நுழைவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.