Kathir News
Begin typing your search above and press return to search.

சமூக நீதியும் மறுக்கப்படவில்லை; அநீதியும் இழைக்கப்படவில்லை - ரயில்வே துறைத்தேர்வு பற்றிய உண்மைகள்!

சமூக நீதியும் மறுக்கப்படவில்லை; அநீதியும் இழைக்கப்படவில்லை - ரயில்வே துறைத்தேர்வு பற்றிய உண்மைகள்!

சமூக நீதியும் மறுக்கப்படவில்லை; அநீதியும் இழைக்கப்படவில்லை - ரயில்வே துறைத்தேர்வு பற்றிய உண்மைகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jun 2020 6:49 AM GMT

மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்ட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிப் போயிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஆலோசகர்கள் தான் சரியில்லையா, இல்லை அவர்கள் சொல்லும் சரியான ஆலோசனைகளை இவர்தான் கேட்பதில்லையா என்று புரியவில்லை. அடிக்கடி‌ தவறான விஷயங்களில் தலையிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

தற்போது தென்னக ரயில்வே நடத்திய கூட்ஸ் கார்டுகளுக்கான தேர்வில் வெறும் 5 தமிழர்கள் தான் தேர்வடைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 'தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்பதற்கு இது மற்றுமொரு சான்று' என்று பதிவிட்டுள்ள அவர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் 'ஆட்சேர்ப்பு முறையை மறு ஆய்வு செய்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தென்னக ரயில்வே கீழ்நிலை பணியாளர்களை, இதில் பலர் பொறியியல் பட்டதாரிகள், கூட்ஸ் ரயில் கார்டுகளாக பணி உயர்வு அளித்து நியமிக்க துறைத் தேர்வு நடத்தியது. இத்தேர்வு கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருக்கும் 96 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3000 பேரையும் சேர்த்து மொத்தம் தேர்வெழுதிய 5,000 பேரில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்சியடைந்துள்ளனர். எஞ்சிய இடங்களுக்கு வட இந்திய பணியாளர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் 96 பேரில் எத்தனை பேர் சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், பொது இட ஒதுக்கீட்டு முறையை தென்னக ரயில்வே பின்பற்றியுள்ளதா என்று பார்த்திருக்க வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி ஸ்டாலின் குறை கூறவில்லை என்பது தென்னக ரயில்வே இட ஒதுக்கீடு கொள்கைக்கு புறம்பாக நடந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. உண்மையிலேயே சமூக நீதி மறுக்கப்பட்டு இருந்தால் தென்னக ரயில்வேயில் இருக்கும் அதிகாரம் மிக்க ஊழியர் சங்கங்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும். எனவே சமூக நீதி மறுக்கப்பட்டது எனும் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

அடுத்து தேர்வு எழுதிய 3000 பேரில் ஏன் 5 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தார்கள் என்பதைப் பற்றி ஸ்டாலின் தெரிந்துக்கொள்ள வேண்டும். விஷயம் தெரிந்தவர்கள் தேர்வெழுதிய 3,000 பேரில் 2,995 பேர் தேர்வடையவில்லை என்றால் அவர்கள் தயார் செய்தது போதவில்லை என்று தான் அர்த்தம் என்று கூறுகின்றனர். வட இந்திய தேர்வர்கள், குறிப்பாக பீகார் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் ரயில்வே, வங்கி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான போட்டி தேர்வுகளுக்கு மிகத் தீவிரமாக தயார் செய்வார்கள்.

இவர்கள் மிக எளிய ஒரு வழிமுறையைப் பின்பற்றுவார்கள். இத்தகைய தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் ஒன்றாக இணைந்து குழுவாக படிப்பது தான் அது. பீகாரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஒரு ஆறு பேர் இது போன்ற ஒரு போட்டி தேர்வுக்காக தயாராகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக படிக்கத் தொடங்ககுவார்கள்.

குறிப்பிட்ட தேர்வுக்கு தயாராக அதற்குத் தேவையான புத்தகங்களில் ஒன்றைத் தேர்வு செய்து ஒவ்வொருவரும் படிப்பார்கள். இவ்வாறு படித்த பின்னர் தாங்கள் படித்த புத்தகத்திலிருந்து பிறரிடம் கேள்வி கேட்பார்கள். இவ்வாறு செய்வதால் பிறருக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் இல்லாத, தவறவிட்ட அல்லது தெரியாத தகவல்கள் இருந்தால் அவற்றைக் கற்க எளிதாக இருக்கும். இவ்வாறு ஒருவரை ஒருவர் சோதிப்பது ஆறு பேரும் தங்களது புத்தகங்களை முழுதாக படித்து முடித்து பிறரையும் கேள்வி கேட்ட பின் தான் முடிவுக்கு வரும்.

இதெல்லாம் முடிந்த பிறகு ஆறு புத்தகங்களில் இருந்தும் முக்கியமான தகவல்கள், வினாக்களைத் தொகுக்கும் பொறுப்பை அறுவரில் ஒருவர் ஏற்றுக்கொள்வார். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட தொகுப்பைக் கற்று மேலும் தெளிவடைவார்கள். இப்படி குழுவில் அனைவரும் தாங்கள் தயாராவதோடு‌ மற்றவர்கள் நன்றாகப் படிக்கவும் உதவுவார்கள். எனவே தேர்வர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதை விட எவ்வளவு தீவிரமாக குறிப்பிட்ட தேர்வுக்கு தயாராகிறார்கள் என்பது தான் முக்கியமாகிறது.

விஷயம் தெரிந்தவர்கள் தென் இந்தியத் தேர்வர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் வட இந்தியர்கள் தேர்வுக்குத் தயாராவதில் தீவிரம் காட்டுவதால் இறுதியில் யார் தேர்வாகிறார்கள் யார் வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். இந்த தயாரிப்பு முறையை தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காண இயலாது.

ரயில்வே ஊழியர்களோ முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்று கூறுகிறார்கள். எனவே எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் என்ன பேசி/செய்து அடிக்கடி செய்திகளில் பெயர் வருமாறு பாரத்துக்கொள்ளலாம் என்று பிரச்சினையே இல்லாத இடத்தில் பிரச்சினை இருப்பதாகக் கூறி மக்களைக் குழப்பிக் கொண்டு இருக்கிறார்.

நன்றி: ஸ்வராஜ்யா

Next Story
கதிர் தொகுப்பு
Trending News