இந்திய - சீன எல்லை பிரச்சனை குறித்து தி.மு.க உதயநிதியின் கேள்விகள் - இன்று மாலை நடைபெறும் அனைத்துகட்சி கூட்டத்தில் பிரதமரிடம் கேட்க முடிவு!
இந்திய - சீன எல்லை பிரச்சனை குறித்து தி.மு.க உதயநிதியின் கேள்விகள் - இன்று மாலை நடைபெறும் அனைத்துகட்சி கூட்டத்தில் பிரதமரிடம் கேட்க முடிவு!

இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டமானது, இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை முதல் உதயநிதியின் ட்விட்டர் பதிவுகள் அதிகமாகவே இந்திய சீன எல்லை பிரச்சினை குறித்தே கேள்விகள் எழுகின்றன.
மேலும் இன்று மாலை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க, திமுக போன்ற கட்சிகளும் பங்கேற்க்கும் நிலையில் இந்த கேள்விகள் அனைத்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கேட்பார் எனவும் தெரிகிறது. அதன் வடிவமாகவே தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி அனைத்து கேள்விகளையும் ட்விட் செய்து வருவதும் குறிப்பிடதக்கது.
எது என்ன என்பது இன்று மாலை நடைபெறும் அனைத்து கட்சி அரசியல் கூட்டத்தில் தெரிந்து விடும்.