சீன படைகளை கால்வானில் இருந்து வெளியேற்றுங்கள் - லடாக் தலைவர்கள், பவுத்த சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
சீன படைகளை கால்வானில் இருந்து வெளியேற்றுங்கள் - லடாக் தலைவர்கள், பவுத்த சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

லடாக் மாநிலம் லேயில் வலுவான நடவடிக்கைகள் எடுத்து சீன துருப்புக்களை கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரியின் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் லடாக் பவுத்த சங்கம் மற்றும் பிராந்தியத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் தளர்வான கொள்கை காரணமாக, சீனா அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொள்கிறது. அரசாங்கம் வலுவாக செயல்படவில்லை என்றால், நமது படையினரும் உள்ளூர் மக்களும் சீன துருப்புக்களின் கைகளில் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று லடாக் பவுத்த சங்கத்தின் தலைவர் பி.டி குன்சாங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக "இரு நாட்டு தலைவர்கள் மட்டுமே பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் LAC வரையறுக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த பிரச்சினையை தீர்க்க லடாக் மக்கள் அனைவரும் சீனாவுக்கு எதிராக எதையும் செய்ய முன்வர வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் MLA டெல்டன் நம்கியால் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் மிக முக்கியமான மூலோபாய புள்ளிகளை எடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரியின் ஒரு பகுதியிலிருந்து சீன துருப்புக்களை வெளியேற்ற நமது அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் லே வரை ஊடுருவ முடியும்" என்றும், எனவே வலுவான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.