Kathir News
Begin typing your search above and press return to search.

சீனக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றதா இந்திய ராணுவம் ? ஜூன் 15 அன்று என்ன தான் நடந்தது ? - உண்மை தகவல்கள் இங்கே.!

சீனக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றதா இந்திய ராணுவம் ? ஜூன் 15 அன்று என்ன தான் நடந்தது ? - உண்மை தகவல்கள் இங்கே.!

சீனக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றதா இந்திய ராணுவம் ? ஜூன் 15 அன்று என்ன தான் நடந்தது ? - உண்மை தகவல்கள் இங்கே.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 3:54 AM GMT

டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் இந்திய துருப்புகள் எவ்வாறு தண்ணீரை ஒரு ஆயுதமாகும் பயன்படுத்தும் சீன ராணுவத்தின் முயற்சியை முறியடித்தார்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் சீனப் படை அமைத்திருந்த கூடாரங்களை இந்திய துருப்புகள் நீக்கினர். இதைத் தொடர்ந்து சீனர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 650 மீட்டர் தொலைவில், சீனப் பகுதியில் கல்வான் ஆற்றின் குறுக்கே தடை ஏற்படுத்தியது ஜூன்‌ 2ம் தேதி வாக்கில் இந்திய ராணுவத்துக்கு தெரிய வந்தது.

இதன்பின்னர் 40 சீனத் துருப்புகள் பயன்படுத்தும் அளவு இட வசதியுடன் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நீக்கிய அதே இடத்தில் இந்திய துருப்புகள் தங்களது கூடாரங்களை அமைத்தனர்.

ஆற்றுத் தண்ணீரைத் தடுப்பது இந்தியப் பகுதிக்கு ஆபத்தாக அமையும் என்றாலும் அப்போதிருந்த புரிதலை மீறுவதாக இருந்தாலும் சீன அந்த தடையை அகற்றத் தயாராக இல்லை. அணை போன்று கட்டப்படவில்லை என்றாலும் இந்த நீர்த்தேக்கப்‌ பகுதி என்ன, எதற்கு அமைக்கப்பட்டது என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

எனவே ஜூன் 15 அன்று இரவு இந்திய துருப்புகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து சென்று அணை போன்ற நீர்த்தேக்க கட்டுமானத்தை அகற்றியதாகத் தெரிகிறது. ஜூன் 17 அன்று எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் அணை‌ போன்ற கட்டமைப்பு நீக்கப்பட்டு கல்வான் ஆறு வழக்கம் போல் நிறைந்த நீரோட்டத்துடன் இருப்பது தெரிகிறது.

ஜூன் 19 அன்று கல்வான் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு பாய்ந்த போது சீன வீரர்கள் அந்த அணைக் கட்டமைப்பின் மிச்சம் மீதியை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து அவர்களே அவர்களது செயலைக் காட்டிக் கொடுத்து விட்டனர்.

இந்திய ராணுவம் ஜூன் 15 அன்று நடந்து கொண்ட விதம் சீனர்களை அதிர்சிக்குள்ளாக்கி நீரை ஆயுதமாக்கும் திட்டத்தை கைவிடச் செய்தது என்று குறிப்பிடப்படுகிறது. சீன ராணுவத்தை அச்சுறுத்தும், இன்னொரு முறை இத்தகைய செயலைச் செய்யும் முன் சிந்திக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் செயல்பாடு அமைந்ததாக கூறப்படுகிறது.

எனவே ஜூன் 15 அன்று நடந்த நிகழ்வு 'அணை போன்ற கட்டமைப்பை நீக்க இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவியதையே காட்டுகிறது' என்றும் ஜூன் 19ம் தேதி பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் 'எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டது இந்த அணை போன்ற கட்டமைப்பையே என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News