ரூ 15 கோடி மதிப்பிலான சிகப்பழகு க்ரீம் விளம்பர வாய்ப்பை நிராகரித்த சுஷாந்த் சிங் - வெள்ளைத் தோலை விரும்பும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ஒரு ரத்தினம்.!
ரூ 15 கோடி மதிப்பிலான சிகப்பழகு க்ரீம் விளம்பர வாய்ப்பை நிராகரித்த சுஷாந்த் சிங் - வெள்ளைத் தோலை விரும்பும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ஒரு ரத்தினம்.!

சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் சிறந்த மனிதரும் கூட என்பதை நிரூபிக்கும் வகையில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் ₹ 15 கோடி மதிப்பிலான விளம்பரப் பட வாய்ப்பை தார்மீக காரணங்களுக்காக அவர் மறுத்தது தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சிவப்பழகு க்ரீம் விளம்பரத்தில் நடிக்க சுஷாந்தை அணுகிய போது இத்தகைய பொருட்களை ஆதரிப்பது தவறு என்பதால் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
பல ரசிகர்கள் அவரைப் பின்பற்றுவதால் அவர்களுக்கு தான் ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்றும் தான் ஆதரவு தெரிவித்து விளம்பரங்களில் நடிக்கும் பொருட்களுக்கு தான் பொறுப்பானவர் என்றும் கருதியுள்ளார். எனவே லாபகரமான ஒப்ந்தமாக இருந்த போதும் சிவப்பழகு க்ரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஆறு விளம்பரங்களில் தோன்ற வேண்டியிருந்த நிலையில், "பொறுப்பான நடிகர்களாக நாம் சமூகத்துக்கு தவறான செய்திகள் சென்றடையக் காரணமாக இருந்துவிடக் கூடாது. தோலின் நிறத்தைப் பொறுத்து ஒன்றை விட மற்றொன்று மேல் என்ற கருத்தைப் பரப்பும் விதமாக எந்தப் பொருளையும் ஆதரிக்கவோ பிரபலப்படுத்தவோ கூடாது" என்று அந்த விளம்பர ஒப்பந்தத்தை மறுத்ததற்கான காரணத்தைத் தெரிவித்தார்.
சுஷாந்த் சிங் பரு நீக்கும் க்ரீம் விளம்பரங்களில் நடித்திருந்த போதும் சிகப்பழகு க்ரீம்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் ஒருபோதும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.