'சேவா சிந்து' செயலியில் பதிவு செய்யாமல் பெங்களூருக்குள் செல்ல முயன்ற தமிழக ஐ.டி.பணியாளர்கள் மீது தடியடி - ஓசூர் அருகே பதற்றம்.!
'சேவா சிந்து' செயலியில் பதிவு செய்யாமல் பெங்களூருக்குள் செல்ல முயன்ற தமிழக ஐ.டி.பணியாளர்கள் மீது தடியடி - ஓசூர் அருகே பதற்றம்.!

கொரோன பரவலை தடுக்க கர்நாடக அரசு அனைத்து மாநில எல்லைகளையும் மூடிவிட்டது. என்றாலும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு புறம் கொரானா தடுப்பு பணிகளையும், இன்னொரு புறம் தொழில்கள், விவசாயம் இயங்கும் வகையில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு விதிகளை தளர்த்தியுள்ளார். இதனால் அங்கு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்தநிலையில் ஏற்கனவே ஊரடன்கின்போது மூடப்பட்ட தனியார் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இப்போது செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைதொடங்காததால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் பெங்களூரு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு, ''வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் 'சேவா சிந்து' செயலியில் பதிவுசெய்ய வேண்டும். அதில் ஒப்புதல் கிடைத்த பின்னர் வருவோர் 3 நாட்கள் அரசு கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்'' என அறிவித்தது.
இந்நிலையில் நேற்று ஓசூரில் உள்ள கர்நாடக எல்லையான ஜூஜூவாடியில் இருந்து கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு நடந்து சென்றவர்களை பெங்களூரு போலீஸார் எச்சரித்து தமிழக எல்லைக்குதிருப்பியனுப்பினர். அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
சேவா சிந்துசெயலியில் பதிவு செய்து அனுமதி கிடைத்தவர்களை மட்டுமே கர்நாடக எல்லைக்குள் அனுமதிப்போம் என கர்நாடக போலீசார் மிகவும் கறாராக தெரிவித்தனர். இதனால் அந்த செயலியில் பதியாதவர்கள் பெங்களூருக்குள் நுழைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.