கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாணவர்கள் விடுதியை கொடுக்க முடியாது - அண்ணா பல்கலைக்கழகம்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாணவர்கள் விடுதியை கொடுக்க முடியாது - அண்ணா பல்கலைக்கழகம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக அண்ணா பல்கலை கழகத்தை மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவெடுத்தது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலை கழகத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் பேரிடர் மேலாண்மை சட்ட விதிப்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
பின்னர் 20-ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கும் விடுதிகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்துக்கு பதில் அளித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மாணவர்கள் அனைவரும் அவர்களின் ஊரில் இருக்கும் சமயத்தில் எப்படி விடுதிகளை காலி செய்து கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் இருக்கும் மாணவர்கள் தங்கும் விடுதிகளை தவிர வகுப்பறைகள், பயன்படுத்தாமல் இருக்கும் கட்டிடங்கள், கல்லூரி அரங்கம் போன்றவற்றை பயன்படுத்த எடுத்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளது.