பிரதமர் மோடியின் தலைமையில் அட்டகாசமான இந்திய ராணுவம் உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
பிரதமர் மோடியின் தலைமையில் அட்டகாசமான இந்திய ராணுவம் உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

1947-ஆம் ஆண்டு இருந்த இந்திய ராணுவம் தற்போது இல்லை எனவும், பிரதமர் மோடியின் தலைமையில் தான் சிறப்பான மற்றும் வலுவான இந்திய ராணுவம் உள்ளது எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு குடிநீர் விநியோகம் செய்ய ₹20 லட்சம் மதிப்பில் விஸ்வநத்தம் பகுதியில் நீர் உந்து நிலையம் காட்டப்படுகிறது.
அந்த பூமி பூஜை வேலைகள் இன்று நடந்தது. அந்த பூஜையில் கலந்து கொண்டு பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது: "1947-ஆம் ஆண்டு இருந்த இந்திய ராணுவம் போல தற்போது இல்லை என்றும் அதை விட பிரதமர் மோடி தலைமையில் தான் சிறப்பான மற்றும் வலிமையான இந்திய ராணுவம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் எதிர்க்கட்சிகள் வழங்கும் அறிவுரைகளை முதலமைச்சர் கேட்பதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; நல்ல கருத்துக்களையும் அறிவுரைகளையும் சின்ன குழந்தைகள் தெரிவித்தால் கூட அதனை முதலமைச்சர் ஏற்பார்" என்றார்.