"இருப்பது இந்தியாவில், புகழ்வது சீனாவை" - தி.மு.க-வை விளாசினாரா அமைச்சர்?
"இருப்பது இந்தியாவில், புகழ்வது சீனாவை" - தி.மு.க-வை விளாசினாரா அமைச்சர்?

இந்தியாவில் சாப்பிட்டுக்கொண்டு அயல்நாட்டை புகழும் தி.மு.கவை சேர்ந்தவர்களால், நாட்டிற்கே ஆபத்து என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
"இந்தியாவிற்க்கு பிரச்சினை வரும் சமயங்களில், தமிழ் நாடும், தமிழக அரசும் துணை நிற்கும். இந்தியாவிற்க்கு பிரச்சனை வரும் சமயங்களில் வெளிநாட்டு சக்திகளுக்கு துணயான கருத்துக்களை விதைக்குறவங்கள நாடு துரோகியாத்தான் பார்க்கும். நாட்ல ஒரு எல்லை பிரச்னை சைனா நம் வீரர்கள் 20 பேரை கொலை செய்தது, அதற்கு பதிலடியாக நம் ராணுவமும் சைனாவின் வீரர்களை பதிலடியாக தாக்கியிருக்கிறது. தற்பொழுதுள்ள ராணுவ பலம் என்பது 1960-களில் உள்ள கட்டமைப்பைவிட பலம் பொருந்தியது.
மோடி அரசின் தலைமையில் மிகுந்த வலுவாக இருக்கின்றது தற்போதைய ராணுவம். ஆகவே இந்திய தேச ராணுவ வீரர்களின் தியாகத்தை மதித்து கருத்துக்களை சொல்ல வேண்டும் யாராக இருந்தாலும், இந்தியாவிலேயே இருந்துக்கொண்டு இந்திய மண்ணின் உணவை தின்றுகொண்டு பாகிஸ்தானுக்கும், சைனாவிற்க்கும் ஆதரவாக கருத்து சொல்பவர்களே தேச துரோகிகள். அந்த மாதிரி கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் இங்கு இருக்கிறார்கள். இடர்பாடுகள் வருகின்ற வேளையில் இந்திய தேசத்தின் பக்கம் நிற்பவர்களை நாடு போற்றும், விமர்சனம் செய்பவர்களை நாடு ஏசும்!" என்று கூறினார்.
தி.மு.க-வின் இந்தியா, சைனா எல்லை பிரச்சனை நிலைப்பாடு கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு முக்கியத்துவமானது என்று சொல்லப்படுகிறது.