லடாக் எல்லை பகுதியை இன்று ஆய்வு செய்கிறார் - இந்திய ராணுவ தளபதி.!
லடாக் எல்லை பகுதியை இன்று ஆய்வு செய்கிறார் - இந்திய ராணுவ தளபதி.!

கடந்த திங்கட்கிழமை இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததில் சீனா தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அதில் பங்கோங் டெசோ பகுதியில் இருக்கும் சீனா படை வீரர்கள் கல்வான் பள்ளத்தாகத்தில் இருந்து பின் செல்ல வேண்டும் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் எடுத்த முடிவுகள் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
தற்போது லடாக்கில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஆய்வு செய்ய உள்ளார். அதில் பாதுகாப்பு மற்றும் கால நிலவரத்தைப் பற்றி ஆய்வு நடத்து இருக்கிறார். அந்த ஆய்வில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி பாதுகாப்பு படை கமாண்டர் மற்றும் ராணுவ அதிகாரிகலும் செல்கின்றனர்.
மேலும், இந்த சமயத்தில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே லடாக்கில் ஆய்வு நடத்துவது முக்கியமானது என கருதப்படுகிறது.