இன்னொரு புல்வாமா தாக்குதலுக்கு தயாராகும் பாகிஸ்தான் - ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் செய்யவிருந்த சதி!
இன்னொரு புல்வாமா தாக்குதலுக்கு தயாராகும் பாகிஸ்தான் - ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் செய்யவிருந்த சதி!

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து இந்திய வீரர்களை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் டி.ஜி.பி., தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் லடாக் எல்லையில், சீனா அத்துமீறிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வந்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஜூன் 23 காலை புல்வாமா மாவட்டத்தின் பன்ட்சூ பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
அப்போது இரு தீவிராவதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்திய தரப்பில் தலைமை கான்ஸ்டபிள் சுனில் காலே வீரமரணம் அடைந்தார்.
நவ்ஷெரா, ராஜோரி - பூஞ்ச் மற்றும் குப்வாரா - கெரன் ஆகிய செக்டார்கள் வழியாக அதிகமான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
பாதுகாப்பு படையினருக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் முழு எச்சரிக்கையுடன் உள்ளோம் என்று போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.