Kathir News
Begin typing your search above and press return to search.

ஆய்வு முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்துக்கு தடை - மத்திய ஆயுஸ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

ஆய்வு முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்துக்கு தடை - மத்திய ஆயுஸ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

ஆய்வு முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்துக்கு தடை - மத்திய ஆயுஸ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2020 1:42 PM GMT

ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்துள்ளதாக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான செய்திகளை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இவ்வாறு கூறியிருப்பதன் உண்மை விவரங்கள் குறித்தும், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல அறிவியல் பூர்வமான ஆய்வு பற்றிய விவரங்கள் குறித்தும் அமைச்சகத்துக்கு தெரியவரவில்லை.

ஆயுர்வேதிக் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகள் தொடர்பான இதுபோன்ற விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் ஆட்சேபத்துக்குரிய விளம்பரங்கள் சட்டம் 1954 மற்றும் விதிமுறைகள்; கோவிட் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு உத்தரவுகள்; ஆகியவற்றால் கட்டுப்படுத்தப் பட்டவை என்று சம்பந்தப்பட்ட ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் சிகிச்சை முறை மருந்துகள் மூலமாக நடத்தப்படும் கோவிட்-19 பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள்; அதற்கான தேவைகள் ஆகியவை குறித்து 21 ஏப்ரல் 2020 தேதியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கை எண் No. L.11011/8/2020/AS உத்தரவும் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட செய்தியின் விவரங்கள், அதில் கூறப்பட்ட விஷயங்கள் குறித்து அமைச்சகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விரைவில் கோவிட் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படும் மருந்தின் பெயர், மூலக்கூறுகள், கோவிட்-19 சிகிச்சை ஆய்வு/ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்/மருத்துவமனைகள், அதற்கான ஒப்பந்தங்கள், விதிமுறைகள், ஆய்வு மாதிரி அளவு, இன்ஸ்டிடியூஷனல் எதிக்ஸ் கமிட்டி ஒப்புதல்; CTRI பதிவு, ஆராய்ச்சி/ஆராய்ச்சிகளின் புள்ளிவிவர முடிவுகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விஷயம் குறித்து முறையாகப் பரிசீலிக்கப்படுவது வரை இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதையும், இவை குறித்து பிரசுரிப்பதையும் நிறுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவிட் சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறப்படுவதற்கு மருந்துப் பொருள் ஒப்புதல் அதற்கான உரிமங்கள் ஆகியவற்றின் நகல்களை அளிக்குமாறு உத்தரகண்ட் அரசின் மாநில உரிமங்கள் அமைப்பை, அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News