இரு விட்டார் சம்மதத்துடன் காதலியை கரம்பிடித்தார் - கும்கி அஸ்வின்.!
இரு விட்டார் சம்மதத்துடன் காதலியை கரம்பிடித்தார் - கும்கி அஸ்வின்.!
By : Kathir Webdesk
பிரபல தயாரிப்பாளர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சாமிநாதனின் மகன் அஸ்வின். இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர். பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி, வந்தான் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கும்கி படத்தின் மூலம் தான் இவருடைய பெயர் கும்கி அஸ்வின் என மாறியது. அந்த படத்தில் சிறப்பான நடித்து இருப்பார்.
தற்போது சென்னை கே.கே நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யா ஸ்ரீயும் அஸ்வினும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ் படிப்பை முடித்தவர். இந்நிலையில் இரு வீட்டார் பெற்றோரின் சம்மதத்துடன் தன் காதலியான வித்யாஸ்ரீயை அஸ்வின் திருமணம் செய்து கொண்டார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் இல்லத்தில் இந்த திருமணம் எளிமையான முறையில் நடந்து உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு இருப்பதால் நெருக்கமான உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார்.