கொரோனா வார்டில் உள்ள கழிவுவறையில் நோயாளி தற்கொலை - பரபரப்பில் மருத்துவனமனை.!
கொரோனா வார்டில் உள்ள கழிவுவறையில் நோயாளி தற்கொலை - பரபரப்பில் மருத்துவனமனை.!

By : Kathir Webdesk
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் கேசி ஜெனரல் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அன்று 60 வயது பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் வார்டில் உள்ள கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் 60 வயது பெண்மணி, அவருடைய மருமகள், பேத்தி போன்றோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தனிமைப்படுத்தப்படும் முகாமில் இருந்து ஜூன் 18-ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த தகவலை பற்றி மருத்துவமனை அதிகாரி பி.ஆர்.வெங்கடேஷய்யா கூறியது: அந்தப் பெண்மணியின் உடல்நிலையை குணமாகி வந்தது. ஆனால், இன்று அதிகாலை 2.40 மணி அளவில் அந்த பெண்மணி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்மணி படுக்கையில் இல்லாததைக் கண்ட மருமகள் மருத்துவர்களை அழைத்தார் என வெங்கடேஷய்யா தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி மன அழுத்தத்துடனும் மிகுந்த கவலையுடன் இருந்துள்ளார். இதனால், கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், பெங்களூருவில் மருத்துவமனையில் நோயாளி தற்கொலை செய்வது இரண்டாவது சம்பவம். இதனால் மருத்துவமனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
