Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்திலிருந்து வந்த போதை மாத்திரைகள் சென்னை விமானத்துறை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் - ஒருவர் கைது.!

இங்கிலாந்திலிருந்து வந்த போதை மாத்திரைகள் சென்னை விமானத்துறை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் - ஒருவர் கைது.!

இங்கிலாந்திலிருந்து வந்த போதை மாத்திரைகள் சென்னை விமானத்துறை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் - ஒருவர் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 3:00 AM GMT

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று சென்னை விமான துறை சுங்கப்பிரிவு போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட அஞ்சல் பொட்டலம் ஒன்றை, சென்னையிலுள்ள, வெளிநாடுகளிலிருந்து வரும் அஞ்சல்களுக்கான அஞ்சல் அலுவலகத்தில் கைப்பற்றியது. இந்தப் பொட்டலம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் அருகே உள்ள வூல்வர்ஹாம்டன் என்னுமிடத்தில் இருந்து வந்திருந்தது.

இந்தப் பொட்டலத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில் இதில் நீலநிற மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. MDMA எனப்படும் (3, 4 மெத்திலின் டை ஆக்சி மெதாம்ஃபெடாமின்) என்ற போதைப் பொருள் கொண்டவை இவை என்று தெரியவந்தது. எம் டி எம் ஏ உள்ளதாக சந்தேகிக்கப்படும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 270 மாத்திரைகள், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் (NDPS சட்டம் 1985) கீழ் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. ப்ளூ பனிஷர் என்று அழைக்கப்படும் இந்த மாத்திரைகளில் மண்டையோட்டுக் குறி இருக்கும். இவை இங்கிலந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகளாக உள்ளன. இவற்றில் அதிக அளவில் எம் டி எம் ஏ பொருள் உள்ளன. மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த அஞ்சலில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபரது முழுமையற்ற பெயரும், முகவரியும் இருந்தது. அந்த முகவரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு ஒரு நபர் இருப்பது தெரியவந்தது. போதை மருந்துக் கடத்தலில் அவருடைய பங்கு குறித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திலிருந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். ஸ்காட்லாந்து யார்டு மற்றும் வெஸ்ட் மிட்லண்ட் காவல்துறையினர் வூல்வர்ஹாம்டன் மற்றும் பர்மிங்ஹாமில் மிகப்பெரிய அளவிலான போதை மருந்து கும்பலை கண்டுபிடித்தனர்.. முன்னதாக சென்னை சுங்கத்துறை ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்த போதை மருந்துகளைக் கைப்பற்றினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News