பிகில் படத்தில் ராயப்பன் வேடத்தில் விஜய் நடிப்பதற்கு காரணம் சுஷாந்த் சிங் - அர்ச்சனா கல்பாத்தி.!
பிகில் படத்தில் ராயப்பன் வேடத்தில் விஜய் நடிப்பதற்கு காரணம் சுஷாந்த் சிங் - அர்ச்சனா கல்பாத்தி.!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். இப்படத்தில் ராயப்பன் என்கிற வேடத்தில் அப்பாவாகவும் மற்றும் மைக்கல் வேடத்தில் மகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் மகனை விட அப்பா கதாபாத்திரத்தில் விஜய் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால், ஆரம்பத்தில் ராயப்பன் வேடத்தில் விஜய்க்கு அப்பாவாக மூத்த நடிகர் யாரையாவது நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை பற்றி படக்குழு யோசித்து வந்த நிலையில் பாலிவுட் காஸ்மெட்டாலஜிஸ்ட் பிரீத்தி ஸ்ரீ என்பவர் சுஷாந்த் சிங் நடித்த சிச்சோர் படத்தை பற்றி கூறியுள்ளார்.
அந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடத்தில் சுஷாந்த் சிங் நடித்து இருந்தார். அதிலும் அப்பா வேடத்தில் நடித்த சுஷாந்த் புகைப்படத்தை காட்டி உள்ளார்.
இதனை கண்டு வியந்து போன படக்குழு பிகில் படத்திலும் தளபதி விஜய்யை அப்பா வேடத்தில் நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளனர். இந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.