சீனாவில் பரவத் தொடங்கும் புதிய இன்புளூயன்சா வைரஸ் - தாங்குமா உலகம்.!
சீனாவில் பரவத் தொடங்கும் புதிய இன்புளூயன்சா வைரஸ் - தாங்குமா உலகம்.!

சீனாவில் புதிய இன்புளூயன்சா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதா?
ஹெச்1என்1 வைரஸை ஒத்திருக்கும் இந்த புளூ வைரஸ் சீனாவில் பரவ தொடங்கியுள்ளது.சீனாவில் பன்றிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள நிலையில், இந்த புளூ பன்றிகளிடமிருந்து பரவுகிறது.ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,இந்த வைரஸ் மனித சுவாச மண்டலத்திற்குள் சென்று அங்கு பலமடங்காக பெருகி வளர்கிறது.ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆதாரங்களின் அடிப்படையில், சீனாவில் உள்ள பன்றி தொழிற்கூடம் மற்றும் இறைச்சிக்கூடங்களில் வேலை செய்யும் மக்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுகிறது.
புளூ காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த வைரஸூக்கு எதிராக செயல்படவில்லை.தற்போது உள்ள கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கவனம் சிதறி இருக்கும் இந்நேரத்தில், ஆபத்தான வைரஸ்களின் மீதும் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்தின் நாட்டிங்கம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் கின் சவ் சங் கூறியுள்ளார்.
இது மனிதர்களிடம் மேலும் மாற்றமடைந்து உலக அளவில் தீவிரமாக பரவும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.ஆராய்ச்சியாளர்கள்,இது மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இன்புளூயன்சா புலனாய்வாளர் ராபர்ட் வெஸ்டர்,இந்த வைரஸ் உடனடியாக மனிதர்களிடையே பரவுமா என்று கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பரவ ஆரம்பிக்கவில்லை. ஒரு தொற்றுநோய் பரவ போகிறது என்பது அது பரவதற்கு முன்பு வரை நமக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
இந்த குறிப்பிட்ட வைரஸ் தொற்றுநோயாக பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று அமெரிக்காவில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் 'ஸ் ஃபோகார்டி இன்டர்நேஷனல் சென்டரில் எவல்யூசனரி பயாலஜிஸ்ட் ஆக உள்ள மார்தா நெல்சன் கூறியுள்ளார் இவர் அமெரிக்காவில் பன்றிகளின் இன்ஃப்ளூயன்சா வைரஸ் மற்றும் அது மனிதர்களிடையே பரவும் விதத்தை பற்றி படிக்கிறார்.
அவர் 2009 இல் ஹெச்1என்1 தொற்று நோய் பரவியபோது, அது பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை முதல் தொற்றை உறுதிப்படுத்தும் வரை யாரும் அறியவில்லை.இன்புளூயன்சா வைரஸ்கள் ஆச்சரியப்படுத்துபவை.கோவிட்-19 ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் இதை புறக்கணிப்பது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.