Kathir News
Begin typing your search above and press return to search.

ஆண்களையும் குறி வைக்கும் லவ் ஜிகாத் - மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளாத கணவன், சீரழியும் கலாச்சாரம்.!

ஆண்களையும் குறி வைக்கும் லவ் ஜிகாத் - மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டு கொள்ளாத கணவன், சீரழியும் கலாச்சாரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 11:00 AM GMT

இந்து பெண்களை குறிவைத்து அணுகி, சில சமயம் உண்மையான பெயரிலும் சில சமயம் போலியான இந்து பெயரைக் கூறியும் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, பின்னர் அதைப் பதிவு செய்த வீடியோ‌ மற்றும் புகைப்படங்களைக் காட்டி அச்சுறுத்தி கட்டாய மதமாற்றம் செய்து இரண்டாவது, மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டோ‌ அல்லது பாலியல் அடிமையாகவோ வைத்திருக்கும் முஸ்லிம்களின்‌ லவ் ஜிகாத் எனும் கலாச்சார சீரழிவு வட இந்தியாவில் மட்டுமே அதிகம் நடந்து வருவதாக நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்காலத்தை படம்பிடித்துக் காட்டும் விதமாக திருச்சியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஆனால் திருச்சியில் நடந்த சம்பவத்தில் ஒரு இந்து ஆணை மூளைச்சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த போதும் என்னவென்று கேட்காத அளவிற்கு சுபாவத்தையே மாறறி வைத்துள்ள கொடுமை நடந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் முகமது பாரூக் என்பவரும் கல்லூரிக் காலம் முதல் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

தினேஷ் பர்வீன் என்ற ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் மத போதனை செய்து 2005ம் ஆண்டு தினேஷையும் அவரது தங்கையையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியுள்ளார். முகமது அஸ்லாமாக மாறிய தினேஷீக்கு அவர் விரும்பிய பெண்ணைத் திருமணமும் செய்து வைத்துள்ளார்.‌ மத போதனைகளின்‌ போது, தான்‌ ஒரு‌ இறைத்தூதர் என பாரூக் அஸ்லாமை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. அஸ்லாம் அவரது மனைவியையும்‌ மதபோதகர் பாரூக்கை வணங்குமாறு கூறியுள்ளார். இதைப் பயன்படுத்தி அடிக்கடி‌ அஸ்லாம் வீட்டிற்கு சென்று புனித நீர்‌ தெளித்து சடங்குகளைச் செய்துள்ளார். ஒரு முறை புனித நீர் என்று கூறி மயக்க மருந்து கலந்து நீரைக் கொடுத்து அஸ்லாமின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் அதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி மிரட்டி ஒன்பது வருடங்களாக துன்புறுத்தி வந்துள்ளார்.

இதைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் ‌தனது கணவரின் தங்கையிடமும், பாரூக்கின் மனைவியிடமும் கூறி அழுதுள்ளார். ஆனால் அவர்களோ மத போதகர் பாரூக் கூறுவதை‌ அப்படியே செய்யுமாறு கூறியுள்ளனர். மேலும், 'சிரிய போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்' என்று கூறி பர்வீனிடமிருந்து 25 பவுன் நகைகளைப்‌ பறித்துள்ளார். அதை மீட்டூத் தரக் கூறி காவல்துறையில் புகார் செய்த போது அவர்கள் நகைகளைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு பாரூக்குக்கு அறிவுறுத்தி வழக்கு பதியாமல் விட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது.‌ எனினும் பாரூக் நகைகளைத் திருப்பித் தரவில்லை என்று பர்வீன்‌ கூறியுள்ளார்.

தான்‌ அனுபவிக்கும்‌ கொடுமைகளைப் பற்றி கணவர் அஸ்லாமிடம் கூறியும்‌ அவர்‌ கண்டுகொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியதாகத் தெரிகிறது. மேலும் அஸ்லாம் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை‌ பாரூக் மது போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்தது போதாது என்று தன்னுடைய பெண்‌ குழந்தையிடமும் பாரூக் அத்துமீற முயற்சித்ததால் பாதிக்கப்பட்ட பர்வீன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை, வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தது, குற்றம் புரிய துாண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அஸ்லாம் மற்றும் பாரூக்கை கைது செய்துள்ளனர். மேலும் பாரூக்கின் தவறுகளுக்கு உடந்தையாக இருந்த பாரூக்கின் மனைவி மற்றும் அஸ்லாமின் தங்கை ஆகியோரைத் தேடி வருகின்றனர். ஆபிரகாமிய மதங்களின் அடிப்படைகள், போதனைகள் எவ்வாறு இந்திய-இந்து கலாச்சாரத்தை சீரழிக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. மேலும், மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் ஒரு தேசிய அபாயமாக கருதப்படும்‌ நிலையில் 'ஜிகாத்துக்கு உதவ' என்று கூறி‌ நகைகளைப் பெற்ற பாரூக்கிற்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்கப்பட வேண்டும்.

நன்றி : தினமலர், நியூஸ்18தமிழ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News