இந்தியா தாக்குவதற்கு முன்பு நாம் முந்திக்கொள்ள வேண்டும் - சீன பாதுகாப்பு ஆலோசகர் குயோ லியாங் பேச்சால் பரபரப்பு.!
இந்தியா தாக்குவதற்கு முன்பு நாம் முந்திக்கொள்ள வேண்டும் - சீன பாதுகாப்பு ஆலோசகர் குயோ லியாங் பேச்சால் பரபரப்பு.!

லடாக் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சில நாட்களுக்கு முன்னர் சீன - இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த மோதலில் இருதரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டன. இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணமடைந்தனர், ஆனால் சீன தரப்பில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்பட்டாலும் மாண்டவர்கள் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
அதனால்தான் சீனா இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் தன சொந்த நாட்டு மக்களுக்கு கூட இதுவரை சொல்லாமல் மறைக்கிறது என்றும் கூறப்படுகிறது,
இந்த சம்பவத்துக்குப் பின் இந்திய சீன படைகளிடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளை குவித்து வருகிறது. ஒரு பக்கம் சமாதானத்துக்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இது குறித்து சீன முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரலும், சீன பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவருமான குயோலியாங் பேசுகையில் " நாம் நமது எல்லைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும், பல இடங்களில் இந்தியா நமது படைகளை எல்லையிலிருந்து விரட்டி வருகிறது,
உண்மையில் இந்தியாதான் அத்து மீறுகிறது. சீனாவின் கேம்ப்களை இந்தியாதான் அத்துமீறி அகற்றி வருகிறது.சீனா இதை அனுமதிக்க கூடாது. இதே சம்பவம் இனியும் தொடர்ந்தால் உடனே சீனா பதிலடி கொடுக்க வேண்டும். தக்க இராணுவ தாக்குதல் மூலம் இந்தியாவிற்கு சீனா உடனே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் இந்தியாவின் அத்துமீறலை சீனா வேடிக்கை பார்க்க கூடாது.
இன்னும் நாம் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும், இந்த பிரச்சினை இப்போது ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்திய எப்போது வேண்டும் என்றாலும் நம்மை தாக்கலாம், அதற்கு முன்னால் நாம் முந்திக்கொள்ள வேண்டும் " என்றார்.
மேலும் இப்போது இந்தியாவை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், இந்தியா ஆபத்தான நாடு என்றும், ''பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணும் இந்தியா இப்போதைய இந்தியா இல்லை'' என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.canadamirror.com/world/04/276495?ref=ls_m_canadamirror