"சீனாவின் தலைவரே எங்கள் தலைவர்" என்று சீனாவுக்கு வக்காலத்து வாங்கிய கம்யூனிஸ்ட்டுகள் - மீண்டும் தாய் நாட்டிற்கு எதிராக செய்த துரோகம்.?
"சீனாவின் தலைவரே எங்கள் தலைவர்" என்று சீனாவுக்கு வக்காலத்து வாங்கிய கம்யூனிஸ்ட்டுகள் - மீண்டும் தாய் நாட்டிற்கு எதிராக செய்த துரோகம்.?

சீன நிறுவனங்கள், PM cares அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்ததால் சீன பொருட்களை நிராகரிக்கக் கூடாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கூச்சலிட்டு வருகின்றனர்.
இவர்கள் சொல்வதை பார்த்தால் ஒருவரிடம் சண்டையிட்டுக்கொண்டேன் என்று கூறினால், நேற்று வரை நட்பு பாராட்டினாயே என்று அடிப்படை புரிதலே இன்றி கேட்பதை போல உள்ளது.
உண்மையாக சொல்லப்போனால், இந்த சீன நிறுவனங்கள் சீனாவில் இருந்து பணத்தை கொண்டு வந்து நன்கொடை அளிக்கவில்லை. இந்தியாவில் ஈட்டிய லாபத்தில் இருந்து சிறு துளியை நன்கொடையாக அளித்து இருக்கின்றன.
அதுவும் சம்பாதித்த லாபத்தில் கூட இல்லை, தங்கள் app-களின் மூலம் மக்களிடம் வசூலித்து தந்துள்ளதாக சொல்கிறார்கள். App பயன்படுத்தும் போது விளம்பரமாக PM Care க்கு டொனேஸன் கேட்டு லிங்க் வரும்.
அதன் மூலமாக வந்த பணம். அதிலும் Handling charge என ஒரு தொகையை எடுத்துக் கொண்டு தான் அளித்திருக்கிறாரகள். ஆக மக்கள் கொடுத்த டொனேஸனிலும் கட்டிங் பார்த்த நிறுவனம் அது.
நன்கொடை அளித்ததாலேயே நாட்டின் இறையாண்மையிலும் பாதுக்காப்பிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய இடதுசாரிகள் எதிர்பார்க்கிறார்களா?
இன்னும் கொஞ்சம் கூடுதலாக நன்கொடை அளித்தால் சீனாவின் தலைவரே எங்கள் தலைவர் என்று 1970 களில் மேற்கு வங்க காம்ரேட்கள் பிரகடனப்படுத்தியது போல இந்திய மக்கள் அனைவரும் " சீன தலைமையே எங்கள் தலைமை " என்று உறுதி ஏற்க வேண்டுமெனக்கூட சொல்வார்கள்.
சமீபத்தில் கம்யூனிஸ்ட்டு முகநூல் பக்கத்தில் வெளியான பதிவுக்கு, மேற்கண்டவாறு பலரும் தங்கள் எதிர்ப்பை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.