அடி மேல் அடி வாங்கும் சீனா - இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த வர்த்தக தொடர்பையே நிறுத்த முடிவு செய்த பிரபல இந்திய நிறுவனம்!
அடி மேல் அடி வாங்கும் சீனா - இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த வர்த்தக தொடர்பையே நிறுத்த முடிவு செய்த பிரபல இந்திய நிறுவனம்!

சீனாவின் எல்லை அத்துமீறல் பிரச்சனையால் இந்தியாவின் அடுத்தடுத்த அடிகளால் வர்த்தக ரீதியில் சீனா மிரண்டுள்ளது. சமீபத்தில் 59 செயலிக்களை தடை செய்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதி கிடையாது எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டமாக அறிவித்த நிலையில் சீனா'விற்கு அடுத்த அடியாக JSW குழுமம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், "அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனாவுடனான வர்த்தக தொடர்புகளை முழுவதும் பூஜ்ஜியமாகக் குறைக்க ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் உறுதி ஏற்பதாக" ஜே.எஸ்.டபிள்யூ சிமென்ட்டின் நிர்வாக இயக்குநரும் பெங்களூரு எஃப்சியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பார்த் ஜிண்டால் வியாழக்கிழமை (ஜூலை 2) அறிவித்தார்.
சீனாவின் எல்லை மீறிய தாக்குதல் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றும், ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் தற்போது சீனாவிலிருந்து 400 மில்லியன் டாலர் நிகர இறக்குமதியைக் கொண்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை பூஜ்ஜியமாகக் குறைப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் பார்த் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், சீனாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய சமையலறை உபகரணங்கள் தயாரிப்பாளரான டி.டி.கே பிரெஸ்டீஜ் சீனாவிலிருந்து பொருட்கள் மற்றும் பாகங்களை வாங்குவதற்கான புதிய ஆர்டர்களை வழங்க மாட்டேன் என்று அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பும் வெளியானது சீனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
டி.டி.கே பிரெஸ்டீஜின் தலைவர் டி.டி.ஜகந்நாதன் "தனது நிறுவனம் சீனாவுக்குப் பின் செப்டம்பர் 30 முதல் எந்தவொரு பாகங்களையும் பொருட்களையும் கொள்முதல் செய்யாது" என்று தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.