இயக்குனர் ராம் பளீர் - என்னால் போலீசை ஹீரோவாக காட்ட முடியாது.!
இயக்குனர் ராம் பளீர் - என்னால் போலீசை ஹீரோவாக காட்ட முடியாது.!

தனது படங்களின் மூலம் தொடர்ந்து பல ரசிகர்களையும் பல விருதுகளையும் வென்று வருபவர் இயக்குனர் ராம். இவ்வாறு தனது படங்களின் மூலம் எப்போதும் ஆழமான கருத்துக்களை பதித்து வரும் இயக்குனர் ராம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார் அதில் தொகுப்பாளர் கேட்டிருந்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், என் படத்தில் போலீசை நான் ஹீரோவாக காட்ட மாட்டேன், ஏனென்றால் அவர்களால் எந்த ஒரு நிலையிலும் நியாயத்தையும் நல்லதையும் பண்ண முடியாது என்பது என்னுடைய அரசியல் சார்ந்த கருத்து, சர்வாதிகாரத்தை என்னால் ஹீரோயிஸமாக காட்ட முடியாது என்று கூறினார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் போலீசை நாம் அவ்வாறு தான் காண்கிறோம் ரஜினிகாந்த் எனக்கு கால்ஷீட் கொடுத்தாலும் என்னால் போலீசை ஹீரோவா நல்லவர்களா வெச்சி படம் எடுக்க முடியாது. இவ்வாறு இயக்குனர் ராம் போலீசை பற்றிய தனது கருத்தை தெரிவித்ததுள்ளார்.