உபி கான்பூரில் ரவுடி கும்பலால் எட்டு காவலர்கள் சுட்டுக்கொலை - முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.!
உபி கான்பூரில் ரவுடி கும்பலால் எட்டு காவலர்கள் சுட்டுக்கொலை - முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இன்று அதிகாலை ரவுடி கும்பல் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். சில காவலர்கள் காயமடைந்துள்ளனர். பிரபல ரவுடி விகாஸ் துபாயை பிடிப்பதற்கு காவல்துறையினர் சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் உபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே பதுங்கி உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரவுடிகளை பிடிப்பதற்கு டிஎஸ்பி தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதைப் பற்றி அறிந்த ரவுடி கும்பல் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 காவலர்கள் உயிரிழந்து உள்ளனர் மற்றும் சில பேர் காயமடைந்துள்ளனர்.
தற்போது ரவுடி கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறையின் குடும்பத்துக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார். பின்னர் அந்த ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அவாஸ்திக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தைப் பற்றி டிஜிபி அவாஸ்தி கூறியது: ரவுடி விகாஸ் துபே மீது 370 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர தேடுதல் பணியில் காவலர்கள் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஜேசிபி வாகனங்களை காவலர்கள் செல்லும் வழியின் நடுவே வைக்கப்பட்டு உள்ளன. அந்த வாகனத்தை அப்புறப்படுத்த காவலர்கள் படை இறங்கிய சமயத்தில் ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இருவரும் இடையான தாக்குதலில் காவலர்கள் 8 பேர் உயிரிழந்ததாக டிஜிபி அவாஸ்தி தெரிவித்தார்.