Kathir News
Begin typing your search above and press return to search.

ஜூம் செயலிக்கு நிகராக 'ஜியோ மீட்' - ஜியோ நிறுவனத்தின் புது வரவு.!

ஜூம் செயலிக்கு நிகராக 'ஜியோ மீட்' - ஜியோ நிறுவனத்தின் புது வரவு.!

ஜூம் செயலிக்கு நிகராக ஜியோ மீட் - ஜியோ நிறுவனத்தின் புது வரவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 9:39 AM GMT

பொது மக்களுக்கு இணையாக பல தொழிலதிபர்களும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக சீனப் பொருட்கள், சேவைகள் மீதான தடையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பிரதமரின் 'சுயசார்பு பாரதம்' என்ற குறிக்கோளை அடைய உத்வேகத்துடன் இயங்கி வருகின்றனர். அந்த வகையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் காணொளிக் காட்சி வாயிலாக அலுவலக கூட்டங்கள், பள்ளி, கல்லூரி வகுப்புகள் நடத்த பயன்படுத்தப்படும் 'ஜூம்' என்ற சீன செயலிக்கு மாற்றாக 'ஜியோமீட்' என்ற சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

அச்சு அசலாக ஜூம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சேவை ஹை டெஃபனிஷனில் (720) வீடியோ கால் செய்யவும், ஒரு அழைப்பில் 100 பேர் பேசும் வசதியுடன் உள்ளது. குறைந்தபட்ச நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், ஒரு அழைப்பை தொடர்ச்சியாக 24 மணி நேரம் வரை இடையூறு இல்லாமல் தொடரலாம் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன் பல சேவைகளை‌ சில காலத்திற்கு இலவசமாக வழங்கிய ஜியோ இந்த சேவையையும் இலவசமாக வழங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது கட்டண அழைப்பு முறை இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் பீட்டா சோதனையை மேற்கொண்ட ஜியோ மீட்டில், பாஸ்வேர்ட் பாதுகாப்பு, பல(5) சாதனங்களில் பயன்படுத்தும் வசதி, திரையைப் பகிரும் வசதி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், எளிதாக ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்திற்கு உரையாடலை மாற்றுவது, பயணத்தின் போது பயன்படுத்த 'Safe Driving Mode', கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு அனுமதி கேட்க 'waiting room' ஆகிய வசதிகளோடு வடிவமைக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சேவை இந்தியாவிற்கு வெளியே வசிப்பவர்களுக்கும் உண்டா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில் Chrome மற்றும் Firefox ஆகிய பிரவுசர்களிலும் விண்டோஸ், iOS, ஆன்ட்ராய்டு தளங்களுக்கு செயலியாகவும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஊடரங்குக்கு பிறகு பலரும் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே செய்ய காணொளிகள் காட்சி உதவியை நாடுவதால் கட்நத மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் வெறும் 4 மில்லியன் ஆன்ட்ராய்டு பயனாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஜூம் செயலிக்கு தற்போது 35 மில்லியன் ஆன்ட்ராய்டு பயனாளர்கள் உள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன எனவும், அது உளவு பார்க்க பயன்படுத்தப் படலாம் என்றும்‌ கருதப்படும் நிலையில் ஜியோ நிறுவனத்தின் இந்த முயற்சி வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள், முக்கியமாக பாதுகாப்பு துறையினர், அலுவலக கூட்டங்களுக்கு ஜூம்‌ செயலியைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News