சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை - ரகுல்பிரீத்சிங் மறுப்பு.!
சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை - ரகுல்பிரீத்சிங் மறுப்பு.!

By : Kathir Webdesk
புத்தகம் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்து என்னமோ ஏதோ தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, தேவ் ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக முடியவில்லையே என்ற ஆதங்கம் தனக்கு இருப்பதாக அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய ஆதங்கத்தை தீர்ப்பது போல் சிவகார்த்திகேயனின் "அயலான்" படம் அமைந்தது. அதில் அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் இந்த நிலையில்தான் படத்திலிருந்து ரகுல்பிரீத்சிங் விலகி விட்டதாக ஒரு தகவல் பரவியது அதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ எனக்கு எதிரியாக இருப்பவர் இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார் அதை நம்ப வேண்டாம் "அயலான்" படத்தில் நான் நடிக்கிறேன் என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பை கேள்விப்பட்டு என் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். அயலான் படத்தை ஜே.ரவிக்குமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
