Kathir News
Begin typing your search above and press return to search.

"கம்யூனிஸ்டுகள், மற்ற நாடுகளின் கம்யூனிஸ்டுகளுடன் கண்டிப்பாக அதிகம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்" - சீதாராம் யெச்சூரி.!

"கம்யூனிஸ்டுகள், மற்ற நாடுகளின் கம்யூனிஸ்டுகளுடன் கண்டிப்பாக அதிகம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்" - சீதாராம் யெச்சூரி.!

கம்யூனிஸ்டுகள், மற்ற நாடுகளின் கம்யூனிஸ்டுகளுடன் கண்டிப்பாக அதிகம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் - சீதாராம் யெச்சூரி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 8:41 AM GMT

லடாக் அருகே உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கடந்த சில வாரங்களில் சீன அரசியல் ஸ்தாபனத்திற்கும் இந்தியாவில் சில அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை வெளிப்படுத்தும் பல தகவல்கள் வந்துள்ளன.

சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC) இடையிலான 'ரகசிய ஒப்பந்தங்கள்' மீண்டும் பொது அரங்கில் வெளிவந்த நிலையில், காங்கிரஸ் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு (2004-2014)ல் வந்த நன்கொடைகள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல கேள்விகள் எழுப்பப்பட்டன

இதேபோன்று இன்னொரு பழைய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது, அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தலைவரான சீதாராம் யெச்சூரி சீனாவைப் பாராட்டுவதையும், கம்யூனிஸ்டுகள் மற்ற நாடுகளின் கம்யூனிஸ்டுகளுடன் (குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா) அதிக தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும் காண முடிந்தது.

2019 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒரு ஸ்கூப்ஹூப் (Scoopwhoop) நேர்காணலில் பேசிய கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, அவர் சீனாவுடன் எவ்வாறு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்பதையும் , அவர் கடந்த காலத்தில் பல முறை கம்யூனிச நாடுகளுக்கு விஜயம் செய்ததாகவும் கூறினார்.

சீனா குறித்த அவரது கருத்துக்கள் குறித்து கேட்டபோது, ​​சீனா ஒரு கம்யூனிஸ்ட் தேசமாக இருந்தபோதிலும், புதிய உலக ஒழுங்கை வெற்றிகரமாகத் தழுவியுள்ளது என்றுப் பாராட்டினார்.



சீனாவில் நடந்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் குறித்து, குறிப்பாக உய்குர் முஸ்லிம்களின் துன்புறுத்தல், சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்களின் உறுப்புகளை அறுவடை செய்வது குறித்து சீதாராம் யெச்சூரியிடம் கேள்வி எழுப்பியபோது, ​​ அந்த அறிக்கைகளை சீனா ஏற்கனவே மறுத்து விட்டதாகக் கூறித் தப்பிக்க முயன்றார்.

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் சீன நடவடிக்கைகள், கருத்து வேறுபாடுகளை, நாட்டின் தலைமைக்கு எதிராக பேசுதை அனுமதிக்காத கம்யூனிஸ்ட் சீனாவின் தன்மை குறித்து கேட்கப்பட்டபோது, ​​சீதாராம் யெச்சூரி அதிர்ச்சியளிக்கும் விதமாக சீனாவை ஆதரித்தார். இந்தியாவிலும் அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் சீனாவுக்கு முட்டுக் கொடுத்த விதத்தை நிருபரே மறுத்து இந்தியாவில் அந்த சுதந்தரம் உள்ளதாகக் கூறினார்.

சுவாரஸ்யமாக, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் நாட்டின் இல்லாதவர்கள் ஆகியோரின் முன்னோடியாக தன்னைக் கூறிக் கொள்ளும் சீதாராம் யெச்சூரி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்றபோது நெட்ஃபிக்ஸ் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய அமெரிக்க தயாரிப்பான ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்தினார் என்பதையும் வெளிப்படுத்தினார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News