உலக இந்துக்கள் தரிசிக்கும் வகையில் அமர்நாத் பனிலிங்க ஆரத்தி தரிசனம்-தூதர்ஷன் மூலம் தினமும் நேரடி ஒளிபரப்பு.!
உலக இந்துக்கள் தரிசிக்கும் வகையில் அமர்நாத் பனிலிங்க ஆரத்தி தரிசனம்-தூதர்ஷன் மூலம் தினமும் நேரடி ஒளிபரப்பு.!

2020 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் தரிசன யாத்திரை இம்மாதம் 21 ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 3 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா கிருமியின் பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்பவர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன. கோவிட்-19 நோயானது காஷ்மீரிலும் தீவிரமாக பரவிவருகிறது.
வேறு வழியற்ற நிலையில், இந்த ஆண்டு சாலை வழியாக ஜம்முவிலிருந்து 3,880 மீட்டர் உயரமுள்ள புனித குகைக் கோயிலுக்கு சாலை வழியாக ஒரு நாளைக்கு 500 யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 500 யாத்ரீகர்களுக்கு மட்டுமே அமர்நாத் புனித யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்கள் காஷ்மீர் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே உடல் பரிசோதனைகள் செய்யப்படுவார்கள் , கோவிட்-19 தொடர்பான சோதனையில் நெகட்டிவ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள், இந்த முறை மிகச்சிறந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதாக ஜம்முகாஷ்மீர் அரசு தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் " இதனால் நேரடியாக கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய இயலாத பக்தர்களின் மனத்தாங்கலை போக்குவதற்காக தினசரி நடைபெறும் ஆரத்தி மற்றும் பூஜை காட்சிகளை தூர்தர்ஷன் தொலைகாட்சி சேனல் நேரலையில் ஒளிபரப்பும். அதே சமயம், நேரடியாக அமர்நாத் யாத்திரைக்கு ஜம்மு-காஷ்மீருக்கு வரும் பயணிகளுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் கண்டிப்பாக செய்யபப்டும், பூஜைகள் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் பி.வி.ஆர் சுப்பிரமணியம் கூறினார்.
முன்னதாக தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தலைமையில் அமர்நாத் யாத்திரை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கூட்டம் கூடி கலந்தாலோசித்து யாத்திரைக்கான திட்டங்களை வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே யாத்திரிகர்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் இப்போது திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
https://www.republicworld.com/india-news/general-news/only-500-yatris-per-day-by-road-from-jammu-for-amarnath-yatra.html