Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறைவைப்பு - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளை மீட்கும் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறைவைப்பு - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

KarthigaBy : Karthiga

  |  8 Nov 2022 5:30 AM GMT

இந்தியாவைச் சேர்ந்த 16 மாலுமிகள் இலங்கை மாலுமிகள் 8 உட்பட 26 பேருடன் எம்.டி ஹெராயிக் இடன் என்ற எண்ணை கப்பல் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி மதியம் ஆப்பிரிக்க நாடான இகுவாடரியல் கினியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலையே அந்த நாட்டு கடற்படையினர் கடற்படையினர் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். எண்ணை திருட்டில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சுமார் மூன்று மாதங்களாக இந்திய மாலுமிகள் உட்பட 26 பேரும் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.இது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில் இகுவாடரியல் கினியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடியாக மீட்குமாறு இந்திய மாலுமிகள் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர்.இது வைரலாக பரவி வருகிறது. இந்த மாலுமிகளை உடனடியாக மீட்குமாறு மதிய வெளியுறவு மந்திரி ஜெயசங்கருக்கு மாநிலங்களவை எம்.பி ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் இந்திய விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு தீர்வு காணுமாறு தனது டுவிட்டர் தளத்திலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே இகுவாடரியல் கினியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 16 மாலுமிகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்குள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.


இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் 16 மாலுமிகளை விரைவாக மீட்பதற்கு நமது தூதரகமும் அபுஜாவில் உள்ள துணை தூதரகமும் இகுவாடரியல் கினியா மற்றும் நைஜீரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அனைத்து ஆளுமைகளும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது அவர்கள் தடுப்பு காவல் மையத்தில் இருந்து கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாலுமிகள் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள தூதரகம் அவர்களை தொடர்ந்து தூதர்கள் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News