Kathir News
Begin typing your search above and press return to search.

பயோடெக் விவசாய திட்டத்தில் 1.60 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர் - அசத்தும் மோடி அரசு!

பயோ டெக் - கிசான் திட்டத்தில் 1.60 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பயோடெக் விவசாய திட்டத்தில் 1.60 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர் - அசத்தும் மோடி அரசு!

KarthigaBy : Karthiga

  |  7 April 2023 11:30 AM GMT

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-


கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பயோடெக் - கிசான் என்கிற உயிரி தொழில்நுட்ப வேளாண் திட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். நீர்ப்பாசனம் ,விளைநிலம், விதைகள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி தீர்வு காண்பதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது .


அதே நேரத்தில் விதைகளின் தரத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளை தானியக்கிடங்கில் சேகரித்தல், உயிரி உரம் உதவியுடன் சாகுபடி செய்தல், பாசனம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆடு, பன்றி ,கோழி வளர்ப்பு மற்றும் மீன் பண்ணைகளை அமைப்பதுடன் அவற்றை ஆரோக்கியமான முறையில் நிர்வகிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News