Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே மரத்தில் 165 வகை மாம்பழங்களா? அதிசயம் ஆனால் உண்மை

ஒரே மரத்தில் 165 வகையான மாம்பழங்களை விளைவித்து அசத்தியிருக்கிறார் மாம்பழ ஆராய்ச்சியாளரான குஷால் கோஷ்

ஒரே மரத்தில் 165 வகை மாம்பழங்களா? அதிசயம் ஆனால் உண்மை

KarthigaBy : Karthiga

  |  4 Jun 2023 6:15 PM GMT

ஒட்டுமுறையை பயன்படுத்தி ஒரே மரத்தில் பல வகையான மாம்பழங்களை விளைவிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன . அப்படி மாம்பழ விளைச்சலில் புரட்சி செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் . அவர்களுள் தனித்துவமானவராக திகழ்கிறார். குஷால் கோஷ். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர் ஒரே மரத்தில் ஒட்டுமுறையை பயன்படுத்தி 165 வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்து அசத்தியிருக்கிறார்.


பம்பாய் ,ஹிம்சாகர் , லாங்க்ரா, சாரங்கா, பிம்லி, பீரா, சம்பா , ராணி பசந்த், அன்னாசி , அல்போன்சா, பாஸ்லி,கோலந்காஸ், பஞ்சவர்ணம் உள்பட வித விதமான மாம்பழ ரகங்கள் அந்த மரத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட வடிவங்கள் அளவுகளில் காத்துக் கொள்ளும்போது அந்த மரத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாதனை படைப்பதற்காக ஒரே மரத்தில் 165 மாம்பழம் வகைகளை விளைவிக்கவில்லை என்கிறார் குஷால் கோஷ்.


மேற்கு மங்கல மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வசிக்கும் குஷால் கோஷ் மாம்பழ ஆராய்ச்சியாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். சிறு வயது முதலே மாமரங்களை வளர்க்க ஆர்வம் காட்டியிருக்கிறார். அவரது மாம்பழ ஆர்வம் அங்குள்ள பாக்டோசர் பகுதியில் மாம்பழத் தோட்டத்தை கட்டமைக்க வைத்துவிட்டது .


இவரது ஈடுபாடு ஒரே மரத்தில் 165 வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்ய வைத்து விட்டது .மேலும் கலப்பினம் மூலம் லாம்போ, ஷியாம்போக் போன்ற புதிய ரக மாம்பழங்களையும் அறிமுகம் செய்துள்ளார் .இந்த கலப்பு வகை மாம்பழங்கள் சுவையிலும் நறுமணத்திலும் அபாரமாக இருப்பதாக கூறுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News