பல கோடி மதிப்புள்ள 17 கிலோ சீதாதேவியின் தங்க சிலை ஏரியில் இருந்து கண்டெடுப்பு - இதன் மதிப்பு இவ்வளவா ?
பல கோடி மதிப்புள்ள 17 கிலோ சீதாதேவியின் தங்க சிலை ஏரியில் இருந்து கண்டெடுப்பு - இதன் மதிப்பு இவ்வளவா ?

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் சந்த்ரதீப் கணவாய் அருகே உள்ள ஏரிக்கு ஷ்யாம் சிங் மற்றும் அருண் ஆகிய 2 சிறுவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தண்ணீருக்குள் இறங்கி நடக்கும்போது அவர்கள் காலில் ஒரு வித்தியாசமான பொருள் தட்டுப்பட்டது. தண்ணீருக்குள் மூழ்கி கையால் தொட்டுப் பார்க்கும் போது அது ஒரு சிலை என்பது தெரியவே அதை வெளியே எடுத்தனர்.
உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர். கவுரா சவுக்கி நிலைய போலீசார் மற்றும் கோண்டா மாவட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்தனர். போலீசாரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. சிறுவர்களால் கண்டெடுக்கப்பட்ட இந்த சீத்தா தேவி சிலை 17 கிலோ 650 கிராம் என்றும் இது அதிக பட்சம் தங்கம் உட்பட எட்டு உலோகங்கள் கலந்து செய்யப்பட்டது என்றும் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல கோடி மதிப்பாகும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் சிலையை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். சிலை குறித்த விசாரணையை உரிய துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் அதிகாரிகள் கூறினர்.