Kathir News
Begin typing your search above and press return to search.

லாவோஸ் நாட்டில் சிக்கித் தவித்த 17 இந்தியர்கள் மத்திய அரசால் பத்திரமாக தாயகத்திற்கு மீட்பு!

லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த பதினேழு இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

லாவோஸ் நாட்டில் சிக்கித் தவித்த 17 இந்தியர்கள் மத்திய அரசால் பத்திரமாக தாயகத்திற்கு மீட்பு!

KarthigaBy : Karthiga

  |  8 April 2024 10:12 AM GMT

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் அங்கு பாதுகாப்பாற்ற மற்றும் சட்ட விரோதமான வேலையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. லாவோஸில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இதற்கான முயற்சிகள் நடந்தன.

இந்த நிலையில் லாவோஸில் தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார் .இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் 'மோடியின் உத்தரவாதம் உள்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் வேலை செய்கிறது . மோடியின் உத்தரவாதம் எல்லா இடங்களிலும் நிறைவேற்றப்படக்கூடிய ஒன்று.

லாவோசில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் .பிரச்சனைக்கு தீர்வு காண வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்ட லாவோஸில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு பாராட்டுக்கள். இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News