Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 18 விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.!

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 18 விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.!

கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 18 விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2019 10:59 AM IST


பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. இரவு சிறப்பு காட்சிக்கு அனுமதித்து உத்தரவிட்டது.இதனையடுத்து கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் ஒரு தியேட்டரிலும், சென்னை சாலையில் மற்றொரு தியேட்டரிலும், பழையபேட்டையில் உள்ள ஒரு தியேட்டரிலும் ‘பிகில்’ படம் திரையிடப்பட்டிருந்தது. ஓசூரில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரையிடப்படவில்லை.இதனால் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ரசிகர்களும், கிருஷ்ணகிரி ரசிகர்களும் இரவு 1 மணி அளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் திரண்டனர். அவர்கள் ‘பிகில்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு சென்று எப்போது திரையிடப்படும் எனக் கேட்டனர்.


அப்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி வந்தபோதிலும், படம் ஒளிபரப்ப சற்று நேரம் ஆகும் என தியேட்டர் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றின் கண்ணாடிகளை சில ரசிகர்கள் உடைத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சிக்னல்களை கற்களை வீசி உடைத்தனர். போலீஸ் ஒலிபெருக்கியை உடைத்து சேதப்படுத்தினார்கள்.


இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான வீடியோக்களை கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். அதன்படி வன்முறையில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி நகர விஜய் ரசிகர் மன்ற மாணவர் அணி அமைப்பாளர் அரவிந்தன் (வயது 19), மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தமிழரசு (25) உள்பட 30 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கடந்த 26-ம் தேதி கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்தநிலையில், கடந்த 25ம் தேதி பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியானபோது கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 18 விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Source:- http://www.puthiyathalaimurai.com/news/cinema/74433-18-vijay-fans-arrested-about-kirushnagiri-violence-issue.html


Next Story
கதிர் தொகுப்பு
Trending News