காங்கிரஸ் ஆட்சி நடத்தும் லட்சணம் - ராஜஸ்தான் முதல்வரும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் 18 மாதங்களாகப் பேசியதில்லை.! #Rajasthan #Congress
காங்கிரஸ் ஆட்சி நடத்தும் லட்சணம் - ராஜஸ்தான் முதல்வரும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் 18 மாதங்களாகப் பேசியதில்லை.! #Rajasthan #Congress

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்குள்ளே உட்கட்சி மோதல் நீடிப்பதால் மத்தியபிரதேச வழியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமோ என்ற யூகங்கள் வலுத்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை 20 முதல் 25 காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் உடன் சச்சின் பைலட் டெல்லி வந்து சேர்ந்தார்.
2018 ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிகாரத்திற்கான போராட்டம் இரு பிரிவுக்குள்ளும் ஏற்படத் தொடங்கியது. ஒருவழியாக அசோக் கெலாட் முதலமைச்சராகி சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டார். இந்த இரு பிரிவுகளுக்கான இடைவெளி அதிகரித்துக்கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. சச்சின் பைலட் ஆதரவாளர்களில் ஒருவர், அசோக் கெலாட் சட்ட சபையில் தன்னுடைய பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் அல்ல என்றும் தெரிவித்தார். அவர்கள் கூறுவது போல் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் அவர்கள் வசம் இருந்தால் கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்று எண்ணுவதை விடுத்து விட்டு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று கூறுகையில், தான் துணை முதல்வர் சச்சின் பைலட் உடன் ஒன்றரை வருடங்களாக பேசுவதில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு அமைச்சர் தன் முதல்வரிடம் பேசுவதில்லை. அறிவுரை கேட்பதில்லை. ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட பேசிக் கொள்கிறார்கள். அதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு. இந்த ஒன்றரை வருடங்களில் நடந்தவைகளைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிடும் அளவுக்கு எழுதலாம்" என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸில் நடக்கும் உள்சண்டைகள் ஒருபுறம் இருந்தாலும் ஒரு முதல்வர், துணை முதல்வருடன் ஒன்றரை வருடமாக பேசாமல் இருந்தால், என்ன ரீதியிலாக ஆட்சி அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்வியும் மக்களுக்கு எழுகிறது. கொரானா வைரஸ் உட்பட ஏகப்பட்ட பிரச்சனைகள் மாநிலங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் போது இந்த ஈகோ சண்டையினால் எத்தனை முக்கியமான முடிவுகள் எடுக்க தாமதம் ஆனதோ என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மற்ற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் பொறுப்பு செயலாளர்களான, அமர்சிங் பூபேஷ், கமல்நாத் ஆகியோர் முதல்வர்களாக ஆக்கப்பட்டபோது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பில் இருக்கும் சச்சின் பைலட் ஏன் முதல்வராக ஆக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அசோக் கெலாட் பதில் கூறுகையில் பெரும்பான்மையான MLAக்கள், தான் முதல்வராவதையே ஆசைப்பட்டனர் என்றும் மற்ற மாநிலங்களை விட ராஜஸ்தான் வித்தியாசமானது என்றும், மக்கள் தான் முதல்வராக வேண்டும் என்றே விரும்பியதாகவும் தெரிவித்தார்.