18 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்து கொரோனாவை அழித்த நான்கு மாத கைக்குழந்தை!
18 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்து கொரோனாவை அழித்த நான்கு மாத கைக்குழந்தை!

விசாகப்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு மாத கைக்குழந்தை குணம் அடைந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 8,854 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பொதுவாகவே குழந்தைகள் மற்றும் முதியவர்களை விரைவாக பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் விசாகப்பட்டினத்தில் நான்கு மாத கைக்குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்துள்ளது. இந்த செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கோதாவரியில் இருக்கும் பழங்குடிப் பெண்ணுக்கு சென்ற மே மாதம் கொரோனா தாக்கியது. அவர்களிடமிருந்து அந்த நான்கு மாதக் கைக் குழந்தைக்கு வைரஸ் பரவி உள்ளது. தஅந்த குழந்தையை வெண்டிலேட்டரில் வைத்து சிகிக்சை கொடுக்கப்பட்டுகுணம் அடைந்துள்ளது.
இதனைப் பற்றி மாவட்ட கலெக்டர் வினய் சந்த் கூறுகையில் "கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தையை மே 25ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள விம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றின. பின்பு 18 நாட்கள் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் எதிர்மறையான தீர்வு வந்துள்ளது. இதனால் நேற்று குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பிவைத்தனர்."
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.