182 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்..
By : Bharathi Latha
திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள முருகன் டீ கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இந்த புகையிலை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிடைத்தது.
அதனுடைய பெயரில் அதிகாரிகள் பல்வேறு விற்பனை நிலையங்களில் மொத்தமாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளை மடக்கிப்பிடித்த அவர்களிடம் ஆய்வு செய்வதில் சுமார் 182 அரை கிலோ புகையிலையை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். அது மட்டும் கிடையாது திருச்சி மாநகரில் மட்டும் சுமார் 182 கிலோ புகையிலை பறிமுதல் செய்து சுமார் மூன்று கடைகளுக்கு சீல் வைத்தும் இருக்கிறார்கள்.
இது தொடர்பான மேலும் நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் காந்திநகர் காவல் நிலையத்தில் ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் மூன்று 2 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது இது தொடர்பான செய்திகள் வெளிவந்த பிறகு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் மற்றும் எத்தகைய தடை செய்யப்பட்ட புகையிலைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் திமுக அரசு இந்த செயலில் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள்? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News