Kathir News
Begin typing your search above and press return to search.

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு ரூ.1.83 லட்சம் கோடி வருவாய்

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு ₹ 1.83 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு ரூ.1.83 லட்சம் கோடி வருவாய்

KarthigaBy : Karthiga

  |  3 Jan 2023 7:00 AM GMT

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் இந்திய ரயில்வேக்கு மொத்தம் ரூபாய் 1,83, 964 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது பற்றி ரயில்வே வெளியிட்ட தகவல் வருமாறு:-


சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் 2022- 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்திய ரயில்வே கடந்த நிதியை விட அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்திய ரயில்வேயில் 1109.38 டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 1029.96 டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டன. இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8% அதிகரித்துள்ளது. வருவாயை பொருத்தவரை சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுதல் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 51 கோடி கிடைத்துள்ளது . 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரயில்வே வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 71% அதிகமாக ₹48,913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை ஆறு சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. இதன் மூலம் வருவாய் 46 சதவீதம் அதிகரித்து ரூபாய் 38,483 கோடி ரூபாயை எட்டியது. முன்பதிவில்லாத பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து ரூபாய் 40,197 லட்சமாக இருந்தது .இதன் மூலம் வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூபாய் 10,430 கோடி ஆனது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News