Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்..

ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Jan 2024 12:47 PM GMT

ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 25 இன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:45 மணியளவில், புலந்த்ஷரில் ரூ.19,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரயில்வே, சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்தத் திட்டங்கள் தொடர்புடையவையாகும்.


மாலை 5.30 மணியளவில் ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்கிறார். ஜந்தர் மந்தர், ஹவா மஹால், ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட நகரின் பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் இணைந்து பிரதமர் பார்வையிடுகிறார். உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷரில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது, புதிய குர்ஜா – புதிய ரேவாரி இடையேயான 173 கிலோமீட்டர் நீளமுள்ள மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையைப் பிரதமர் காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.


மேற்கு மற்றும் கிழக்கு சிறப்பு சரக்கு வழித்தடப் பிரிவுகளுக்கு இடையே முக்கியமான இணைப்பை இது ஏற்படுத்துகிறது. உலகிலேயே முதலாவதான இந்த சுரங்கப்பாதை இரட்டை அடுக்குப் பெட்டக ரயில்களைத் தடையின்றி இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சரக்கு வழித்தடத்தில், சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் ரயில்களின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும். மதுரா – பல்வால் பிரிவு மற்றும் சிபியானா புசுர்க் – தாத்ரி பிரிவை இணைக்கும் நான்காவது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தப் புதிய வழித்தடங்கள் தெற்கு மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவுடன் தேசிய தலைநகருக்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News