2 மணிநேரத்தில் சாமி தரிசனம் - திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பர் பிளான், மகிழ்ச்சியில் பக்தர்கள்
By : Mohan Raj
திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பான நிர்வாகத்தால் இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்புத்தாண்டு முன்பு வரைக்கும் 40 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை தற்போது 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் மூன்று இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர், கடந்த சில நாட்களாக கோடை விடுமுறையால் பக்தர்கள் அதிகமாக திருப்பதியில் தரிசனம் செய்ய குவிந்து வருவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை அதனால் இலவச தரிசனத்தில் இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை பார்க்க முடிந்தது என பக்தர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது
திருப்பதியில் நேற்று மட்டும் 63,084 பக்தர்கள் தரிசனம் செய்தனர், 3.12 கோடி அளவு உண்டியல் காணிக்கை வசூல், ஆனது 28,000 முடி காணிக்கை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.