மசூதிக்குள் தஞ்சம் புகுந்த 2 பயங்கரவாதிகளை கண்ணீர் குண்டுகள் வீசி சுற்றி வளைத்த இராணுவத்தினர்!
மசூதிக்குள் தஞ்சம் புகுந்த 2 பயங்கரவாதிகளை கண்ணீர் குண்டுகள் வீசி சுற்றி வளைத்த இராணுவத்தினர்!
By : Kathir Webdesk
ஜம்மு - காஷ்மீரில் இன்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வெளியான தகவலின்படி, ஷோபியனில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அதே சமயம் புல்வாமாவில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவின் பாம்பூர் பகுதியில் உள்ள மீஜில் பகுதியை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புபடையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார், ஆனால் இரண்டு பயங்கரவாதிகள் அருகிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்தனர்.
இதையடுத்து, மசூதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி மசூதியிலிருந்து வெளியேறிய பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டுக்கொலை செய்தனர்.