விவசாயிகளுக்கான திட்டத்தில் மத்திய அரசின் உத்தரவுகளை மீறிய 2 வங்கி ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு !
விவசாயிகளுக்கான திட்டத்தில் மத்திய அரசின் உத்தரவுகளை மீறிய 2 வங்கி ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு !

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டை வழங்க மறுத்ததாலும், இந்திய அரசின் உத்தரவுகளை மீறியதற்காகவும். உததரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் செயல்படும் இரண்டு வங்கி ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமாரின் உத்தரவின் பேரில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் வங்கி ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் கிசான் சம்மன் நிதிக்கு தகுதியான ஒவ்வொரு விவசாயியும் கிசான் கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளலாம் வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவுகள் வேளாண் துணை இயக்குநர் மூலம் வங்கி அதிகாரிகள் வழியே அனுப்பப் பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான வங்கிகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. கிசான் கிரெடிட் அட்டையை வாங்க வரும் விவசாயிகளை வங்கி அதிகாரிகள் கண்டு கொள்ளவது இல்லை. மேலும் அவர்களின் கோரிக்கைகளை சரியாக கேட்பதும் இல்லை. பல நாட்கள் வங்கி அதிகாரிகளை விவசாயிகள் சுற்றி வரவேண்டிய நிலைமை உள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் அட்டையை வழங்க மறுத்ததாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கிகள் மீது புகார் வந்தது. இது மட்டுமல்லாமல், இந்த வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட இரண்டு ஊழியர்கள் அரசாங்க உத்தரவுகளை சரியாக மதிப்பதில்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. அதே நேரத்தில், சி.டி.ஓ அதிகாரி அபிஷேக் பாண்டே வங்கியை அணுகி கே.சி.சி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் யாரும் அதை மதிக்கவில்லை. அலட்சியம் செய்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் டி.எம்.ரவீந்திர குமார், இரு வங்கி ஊழியர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டார். இது தொடர்பாக, கே.சி.சி. அட்டை வழங்க மறுத்த ஸ்டேட் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவன் குமார் மற்றும் அலகாபாத் வங்கியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதுல் குமார் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.