நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவிற்காக பாஜக சார்பில் ரூபாய்.2 லட்சம் நிதி உதவி.!
நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவிற்காக பாஜக சார்பில் ரூபாய்.2 லட்சம் நிதி உதவி.!

நடிகர் பொன்னம்பலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொன்னம்பலம் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், மாயி, வால்டர் வெற்றிவேல், செந்தூரப்பாண்டி, முத்து, இந்தியன் ஆகிய வெற்றிப் படங்களில் வில்லனாக நடித்தவர்.
நடிகர் பொன்னம்பலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தற்போது பொன்னம்பலத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பொன்னம்பலம் அதிமுகவில் இருந்து 2017ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
தற்போது சிறுநீரக கோளாறு காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொன்னம்பலத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பின்னர் அவருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய். இரண்டு லட்சம் வழங்கினார்.
https://twitter.com/Murugan_TNBJP/status/1282268627467505666
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் இருந்துள்ளார்.