Kathir News
Begin typing your search above and press return to search.

2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் கடத்தல்-முகமது நியாஸ் அக்யூயாப் ஹூசைன் கைது!

2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் கடத்தல்-முகமது நியாஸ் அக்யூயாப் ஹூசைன் கைது!

2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் கடத்தல்-முகமது நியாஸ் அக்யூயாப் ஹூசைன் கைது!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 12:23 PM GMT


சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ரூ.2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று முன்தினம் சுங்கத்துறையினர் இரண்டு.அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது ரூ.2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


29 பயணிகளிடமிருந்து சர்வதேச அளவில் ரூ.2.16 கோடி மதிப்புள்ள 6.4 கிலோ 24 கேரட் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


இலங்கை விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் கொழும்பிலிருந்து வரும் முகமது நியாஸ் என்ற பயணி, பெரிய அளவில் தங்கத்தைக் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படடையில் முகமது நியாஸை விசாரணை நடத்தியதில் அவர், தங்கத்தை பேஸ்ட் வடிவத்தில் 29 பயணிகளிடம் கொடுத்து கடத்தி வருவதை ஒப்புக்கொண்டார். இந்த 29 பயணிகளிடம் நடத்திய சோதனையின் போது, நியாஸிடமிருந்து தங்கம் பெற்றுக் கொண்டதை அவர்களும் ஒப்புக்கொண்டனர். பேஸ்ட் வடிவத்தில் இருந்த சுமார் 7.5 கிலோ தங்கம் இந்தப் பயணிகளின் ஆசனவாயில் மறைத்து கொண்டுவரப்பட்டதை அறிந்து, தங்கம் அவர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
முகமது நியாஸ் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர், துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னைக்கு வந்தவர்.


மற்றொரு சோதனையில் நேற்று முன்தினம் இரவு குவைத்திலிருந்து சென்னை வந்த, கடப்பாவைச் சேர்ந்த அக்யூயாப் ஹூசைன் என்ற நபரின் பெட்டியைச் சோதனையிட்டபோது, இரண்டு கைக்கடிகாரங்களில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட தங்கத் தகடுகள், தங்க மோதிரங்கள், தங்கத்துண்டுகள் ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ரூ.11,88,000 மதிப்புள்ள இந்த 352 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News