Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவைவிட இந்தியாவே பரவாயில்லையாம் !!பொருளாதார மந்தத்தால் 2 சாம்சங் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவுக்கு வர முடிவு!!

சீனாவைவிட இந்தியாவே பரவாயில்லையாம் !!பொருளாதார மந்தத்தால் 2 சாம்சங் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவுக்கு வர முடிவு!!

சீனாவைவிட இந்தியாவே பரவாயில்லையாம் !!பொருளாதார   மந்தத்தால் 2 சாம்சங் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவுக்கு வர முடிவு!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Oct 2019 5:01 AM GMT



செல்போன் தயாரிப்பில் உலக அளவில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ லிமிடெட். குறைந்த விலை தயாரிப்புகளில் உலக அளவில் முன்னணியில் இருந்த இந்த நிறுவனம் தற்போது சீனாவில் நிலவிவரும் பொருளாதார மந்தம் மற்றும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு காரணமாக சமாளிக்க முடியாமல் அங்குள்ள நிறுவனங்களை இந்தியாவுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியா, வியட்நாமில் தங்களது தொழிலை இந்த நிறுவனம் விரிவுபடுத்தியும் வருகிறது.


சீனாவின் தெற்கு மாகாண நகரமான ஹுய்சோவில் உள்ள சாம்சங்கின் கடைசி சீன தொலைபேசி தொழிற்சாலையான ஆலையில் சென்ற ஜூன் மாதம் முதல் உற்பத்தியை குறைத்துள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் மற்றொரு தொழிற்சாலையில் உற்பத்தியை முழுவதும் நிறுத்தியது. இது அந்த நாட்டில் நிலவி வரும் கடுமையான தொழில் நிலைமையை கோடிட்டுக் காட்டியது.


அதிகரித்து வரும் தொழிலாளர் செலவுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக தாங்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இனிமேல் தாய்லாந்தில் மட்டுமே ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்யப்போவதாக சோனி நிறுவனமும் கூறியுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இன்னும் சீனாவில் பெரிய அளவில் தங்கள் தயாரிப்புகளை செய்து வருகிறது.


இந்தியாவில் செல்போன்கள் சந்தையில் பொருளாதார சுணக்க பாதிப்பு எதுவுமில்லை. அதுவும் தரமான குறைந்த விலை போன்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புள்ளது, மேலும் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் போட்டி குறைவாகவே உள்ளது. இதனால் மூடப்படும் 2 சீன நிறுவனங்களை இந்தியாவில் அமைக்கவும், ஏற்கனவே இந்தியாவில் உள்ள தங்கள் தொழில்களை விரிவு படுத்தவும் சாம்சங் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  Â


This is a Translated Article From Business Standard


Next Story
கதிர் தொகுப்பு
Trending News