எம்.எஸ் டோனிக்காக டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெறவேண்டும் - வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.!
எம்.எஸ் டோனிக்காக டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெறவேண்டும் - வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.!
By : Kathir Webdesk
தற்போது வரவிற்கும் டி20 உலகக் கோப்பையை எம்.எஸ் டோனிக்காக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இவர் இதுவரை இந்தியாவுக்காக இவர் இவர் இந்தியாவில் இதுவரை 28 டெஸ்ட், 53 ஒரு நாள், 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்துக்கு ஏழு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தன. இவருடைய இந்த ஏழு ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் முடிகிறது. இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடை செப்டம்பர் மாதம் முடிய உள்ள நிலையில் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தீவிர உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் ஸ்ரீசாந்த்.
2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை டோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அந்தத் தொடர்களில் எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்ரீசாந்தின் பந்து வீச்சு நெருக்கடியை கொடுத்தது.
தற்போது கிரிக்கெட் ஆடிக்டர் இணையதளதிற்கு பேட்டி கொடுத்த ஸ்ரீசாந்த் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் எம்.எஸ் டோனி அவர்கள் கண்டிப்பாக வரும் டி20 உலகக் கோப்பையை விளையாட வேண்டும். இதற்கு முன்பே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். அந்த சமயத்தில் டோனியின் சிறப்பான பேட்டிங்கை பார்க்க முடியும். எம்.எஸ் டோனிக்கு எந்த சமயத்தில் எதனை செய்யவேண்டுமென தெரியும்.
எம்.எஸ் டோனி அவர்கள் இந்திய நாட்டுக்காக விளையாடுகிறார் மற்றும் இந்திய ராணுவத்தில் கௌரவ பொறுப்பில் உள்ளார். 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற பின்னர் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை எப்படி தோளில் மீது சுமந்து மைதானத்தை சுற்றினோமோ அதேபோல் வரும் டி20 உலக கோப்பையை வென்று உலக கோப்பையை வெற்றி பெற்று டோனிக்கும் அதேபோன்று செய்வோம்.
இவ்வாறு வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.