Kathir News
Begin typing your search above and press return to search.

கோப்ரா படத்தில் 20 விதமான தோற்றங்களில் விக்ரம்.!

கோப்ரா படத்தில் 20 விதமான தோற்றங்களில் விக்ரம்.!

கோப்ரா படத்தில் 20 விதமான தோற்றங்களில் விக்ரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 1:51 PM GMT

விக்ரம் நடித்துவரும் "கோப்ரா" படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது அவருடைய 58வது படம். 20க்கு மேற்பட்ட தோற்றங்களில் விக்ரம் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்துவருகிறார். பெங்களூரைச் சேர்ந்த இவர் K.G.F என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். கோப்ரா படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன.

இந்தப் படத்தை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விக்ரம் திட்டமிட்டிருந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

அதனால் கோப்ரா படத்தை முதலில் முடித்துக் கொடுத்து விட்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தநிலையில் கோப்ரா படத்தில் இடம்பெறும் "தும்பி துள்ளல்" என்ற பாடல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. விக்ரம் நடித்துவரும் இந்த படத்தை "டிமான்டி காலனி", "இமைக்காநொடிகள்" ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து டைரக்டர் செய்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News